செய்திகள் தமிழ் தொடர்புகள்
சுமார் ரூ.624 கோடிக்கு சொத்து - வெளியான விஜயின் வேட்புமனு
சென்னை:
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவரது சொத்து மதிப்பு, அவர் சார்ந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனக்கு இருக்கும் அசையும் சொத்தின் மதிப்பு சுமார் ரூ.404.58 கோடி எனவும், அசையா சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.220.15 கோடி எனவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
தனது வசம் ரூ.1.20 கோடி மதிப்பில் 883 கிராம் தங்கமும், ரூ.15 லட்சம் மதிப்பில் வெள்ளியும், மனைவி சங்கீதா வசம் ரூ.4.07 கோடி மதிப்பில் 3,132 கிராம் தங்கமும், ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரமும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Toyota Vellfire உட்பட 5 சொகுசு கார்கள், ஒரு TVS XL Super இருசக்கர வாகனம் என ரூ.7.52 கோடி மதிப்பில் வாகனங்கள் இருப்பதாகவும், சுமார் ரூ.3.44 கோடி வருவாய் தொடர்பாக 4 வருமான வரி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
விஜய் வித்யாஸ்ரம் பள்ளி தாளாளர், மூன்று அறக்கட்டளைகளின் அறங்காவலர் என தொழில் சார்ந்த தகவல்களை குறிப்பிட்டுள்ள விஜய், சென்னை லயோலா கல்லூரியில் B. Sc பட்டப்படிப்பில் இடைநிற்றல் குறித்தும் தெரிவித்துள்ளார்.
மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடி, அப்பா சந்திரசேகருக்கு ரூ.3 கோடி, அம்மா ஷோபாவுக்கு ரூ.87 லட்சம், தவெக பொதுச்செயலாளர் ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன் வழங்கி இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். இப் பட்டியலில் அவரது மகன், மகளும் இடம் பெற்றுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
