செய்திகள் மலேசியா
நெற்பயிர்களை வாட்டும் கடும் வறட்சி
கோத்தா பாரு:
நீண்டகால வறட்சியால் இந்தப் பருவத்தில் கிளந்தானில் நெல் விளைச்சல் 40 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிளந்தான் நெல் விவசாயிகள் சங்கத்தின் (PESAK) தலைவர் சூஹா இஸ்மாயில், இப்போது உள்ள நீர் விநியோகம் நெல் வயல்களுக்கு வழங்க போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளார்.
5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளால் பயிரிடப்படும் 26,000 ஹெக்டேர் நெல் பயிர்கள் தற்போது 85 முதல் 120 நாட்கள் வயதுள்ளவை, ஒரு சிறிய பகுதி இப்போது அறுவடை செய்யப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"ஆனால் பெரும்பாலான நெல் அடுத்த மாதம் அறுவடை செய்யப்படும், விதைக்கும் நேரத்திலிருந்தே நீர் விநியோக பிரச்சினையைச் சந்தித்தமையால் விளைச்சல் 40 சதவீதம் வரை குறையும்.
"கால்வாய்களில் நீர் இருக்கிறது, ஆனால் அந்த நீரை வயல்களுக்கு பாய்ச்சுவதர்குப் போதுமானதாக இல்லை, இதனால் சில பகுதிகளுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை" என்று தொடர்புகொண்ட போது அவர் கூறினார்.
அதே நேரத்தில், திடீர் டீசல் விலை உயர்வால், சில விவசாயிகள் வரும் ஜூனில் நடைபெறும் இந்த ஆண்டின் முதல் பருவ நெல் சாகுபடியை ஒத்திவைக்க கட்டாயப்படுவதாகவும் சூஹா தெரிவித்தார்.
எனவே, அதிகரித்த செலவுகளைக் கருத்தில் கொண்டு தற்போது ஒரு டன்னுக்கு RM1,500 ஆக இருக்கும் நெல் கொள்முதல் விலையை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தைக் கோரியுள்ளதாக அவர் கூறினார்.
"டீசல் விலை உயர்வால் அதிகரித்துவரும் பல்வேறு செலவுகளால் கவலைப்படுவதால் புதிய பருவ சாகுபடியை ஒத்திவைக்க பலர் முடிவு செய்துள்ளனர்.
"நெல் கொள்முதல் விலையை உயர்த்துவது உட்பட அரசாங்கம் எடுக்கும் அணுகுமுறையைப் பெரும்பாலான விவசாயிகள் முதலில் பார்க்க விரும்புகிறார்கள்" என்று அவர் கூறினார்.
காலநிலை, தட்பவெப்ப மாற்ற நிபுணர்கள் எல் நினோ நிகழ்வு, புவி வெப்பமடைதலின் விளைவாக இந்த ஆண்டு உலகளாவிய வெப்பநிலை உச்சத்தை எட்டும் என்று கணித்துள்ளனர் என்று ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
காலநிலை, தட்பவெப்ப மாற்ற நிபுணர் பேராசிரியர் எமிரிட்டஸ் டாக்டர் ஃப்ரெட்டோலின் தாங்கங், எல் நினோ கட்டம் உலக வெப்பநிலையை உயர்த்தும் திறன் கொண்டது என்றும், 1.55 டிகிரி செல்சியஸ் உயர்வுடன் 2024 உலகின் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறியதாக கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 2:34 pm
மனிதவள அமைச்சராக 100 நாட்கள்; நீண்ட கால தீர்வுகளில் கவனம் செலுத்தப்படுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
March 28, 2026, 2:32 pm
மலேசிய இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் NRTIA மலேசிய நிர்வாகிகள் சந்திப்பு
March 28, 2026, 2:31 pm
உள்நாட்டு கலைஞர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமையும் ஆதரவும் வழங்க வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 28, 2026, 2:30 pm
புந்தோங் இந்து மயானத்தில் மேலும் இரண்டு மின் தகன அடுப்புகள் நிர்மாணிக்கப்பட்டது: டத்தோ சிவநேசன்
March 28, 2026, 12:44 pm
'என்ஜின், குளிரூட்டி ஓடும் நிலையில் காரில் தூங்குவது மரணத்தை விளைவிக்கலாம்': சித்தி சஹாரா
March 28, 2026, 11:06 am
