செய்திகள் மலேசியா
ரொட்டி வாங்கும்போது மாணவரை அறைந்த நபரை போலிசார் கைது செய்தனர்
கோலாலம்பூர்:
கடந்த செவ்வாய்க்கிழமை, பாசார் செனி எல்ஆர்டி ரயில் நிலையததிலுள்ள ஒரு உணவுக் கடையில் நடந்த சம்பவத்தில், முதலாம் படிவ மாணவரை அறைந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.
டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைவர் சசாலி ஆடம் இதனை கூறினார்.
வேலையில்லாதவரான 48 வயது சந்தேக நபர், நேற்று அதிகாலை சுமார் 3.40 மணியளவில், இங்குள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலையில் போலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டார்.
விசாரணை, வாக்குமூலத்தில் தனது முறைக்காகக் காத்திருந்தபோது, அருகில் இருந்த பதின்வயது இளைஞன் மூக்கைக் குடைந்ததால் ஏற்பட்ட கோபத்தில், பாதிக்கப்பட்டவரின் முகத்தில் அவர் தரையில் விழும் வரை அறைந்ததாகச் சந்தேக நபர் ஒப்புக்கொண்டது தெரியவந்தது.
கைதுக்குப் பிறகு, சம்பவத்தின்போது சந்தேக நபர் அணிந்திருந்ததாக நம்பப்படும் வெள்ளைச் சட்டை, கருப்பு நிற நீண்ட கால்சட்டை ஆகிய ஆடைகளையும் போலிஸ் கைப்பற்றியது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 2:34 pm
மனிதவள அமைச்சராக 100 நாட்கள்; நீண்ட கால தீர்வுகளில் கவனம் செலுத்தப்படுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
March 28, 2026, 2:32 pm
மலேசிய இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் NRTIA மலேசிய நிர்வாகிகள் சந்திப்பு
March 28, 2026, 2:31 pm
உள்நாட்டு கலைஞர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமையும் ஆதரவும் வழங்க வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 28, 2026, 2:30 pm
புந்தோங் இந்து மயானத்தில் மேலும் இரண்டு மின் தகன அடுப்புகள் நிர்மாணிக்கப்பட்டது: டத்தோ சிவநேசன்
March 28, 2026, 12:44 pm
'என்ஜின், குளிரூட்டி ஓடும் நிலையில் காரில் தூங்குவது மரணத்தை விளைவிக்கலாம்': சித்தி சஹாரா
March 28, 2026, 12:16 pm
நெற்பயிர்களை வாட்டும் கடும் வறட்சி
March 28, 2026, 11:06 am
'தீடூர் லம்பாக்' நிகழ்ச்சி: பேராக் முஃப்தி இலாகாவின் முக்கிய அறிவுரை
March 28, 2026, 10:44 am
