செய்திகள் மலேசியா
மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ராஜதந்திர முயற்சிகளுக்கு டத்தோஸ்ரீ அன்வாரும் பிரபோவோவும் ஒப்புக்கொண்டனர்
ஜாகர்த்தா:
மேற்கு ஆசியாவில் மோதல்களைத் தணிப்பதற்கும், பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், அமைதியான, நீடித்த தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுப்பதற்கும் தூதரக முயற்சிகளைத் தீவிரப்படுத்த மலேசியாவும் இந்தோனேசியாவும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தோனேசியாவிற்கு மேற்கொண்ட தனது சிறப்புப் பயணத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவைச் சந்தித்தபோது இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தற்போது எரிசக்திப் பாதுகாப்பையும் உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் சீர்குலைத்து வரும் மேற்கு ஆசிய மோதலை எதிர்கொள்வதற்கான ஒரு பொதுவான தளத்தைக் கண்டறியப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் அதிபர் பிரபோவோவுடன் நடைபெற்ற இந்த அர்த்தமுள்ள சந்திப்பு ஒரு ஆக்கப்பூர்வமான வாய்ப்பைத் திறக்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
கடந்த மார்ச் 23 அன்று இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது பிரபோவோ விடுத்த அழைப்பின் பேரில், இந்த ஆண்டு டத்தோஸ்ரீ அன்வார் ஜாகர்த்தாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இந்த ஒரு நாள் சிறப்புப் பயணமாகும்.
அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், அமைதியைப் பேணவும், ஸ்திரத்தன்மையை உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும் மக்களின் நலனுக்காகப் பொருளாதார மீள்திறனை வலுப்படுத்தவும் கொள்கை ரீதியான வட்டார ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மலேசியாவும் இந்தோனேசியாவும் வலியுறுத்தியதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 2:34 pm
மனிதவள அமைச்சராக 100 நாட்கள்; நீண்ட கால தீர்வுகளில் கவனம் செலுத்தப்படுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
March 28, 2026, 2:32 pm
மலேசிய இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் NRTIA மலேசிய நிர்வாகிகள் சந்திப்பு
March 28, 2026, 2:31 pm
உள்நாட்டு கலைஞர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமையும் ஆதரவும் வழங்க வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 28, 2026, 2:30 pm
புந்தோங் இந்து மயானத்தில் மேலும் இரண்டு மின் தகன அடுப்புகள் நிர்மாணிக்கப்பட்டது: டத்தோ சிவநேசன்
March 28, 2026, 12:44 pm
'என்ஜின், குளிரூட்டி ஓடும் நிலையில் காரில் தூங்குவது மரணத்தை விளைவிக்கலாம்': சித்தி சஹாரா
March 28, 2026, 12:16 pm
நெற்பயிர்களை வாட்டும் கடும் வறட்சி
March 28, 2026, 11:06 am
'தீடூர் லம்பாக்' நிகழ்ச்சி: பேராக் முஃப்தி இலாகாவின் முக்கிய அறிவுரை
March 28, 2026, 10:44 am
