நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்து மலாய்க்காரர்களையும் ஒன்றிணைக்கக்கூடிய வேட்பாளர்கள் மட்டுமே பிரதமராகத் தகுதி பெறுவார்கள்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

அனைத்து மலாய்க்காரர்களையும் ஒன்றிணைக்கக்கூடிய வேட்பாளர்கள் மட்டுமே பிரதமராகத் தகுதி பெறுவார்கள்.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இதனை கூறினார்.

மலேசியர்களை ஒன்றிணைக்கும் திறனே, ஒருவர் பிரதமராக ஆவதற்கான தகுதியைத் தீர்மானிப்பதில் மிக முக்கியமான காரணமாகும்.

ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பதவியோ அல்லது பிரதமர் வேட்பாளர் என்ற அந்தஸ்தோ, ஒருவர் நாட்டை வழிநடத்த நியமிக்கப்படுவார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது.

பல கட்சிகளாகப் பிரிந்தால், எந்தக் கட்சியும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறாது.

பொதுத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், நீங்கள் தலைமை தாங்கும் கட்சியின் ஆதரவு இருந்தாலும் பிரதமராக முடியாது.

எனவே, கட்சித் தலைவராக இருக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கூறிய துன் மகாதீர், எந்தவொரு தனிநபரையோ அல்லது கட்சியையோ குறிப்பாகக் குறிப்பிடாமலோ அல்லது பெயரிடாமலோ ஒரு அறிக்கையில் கூறினார்.

மலாய் சமூகத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்த மிகவும் தகுதியானவர் யார் என்பதை மலாய் ஒற்றுமையே தீர்மானிக்கும்.

அதன் மூலமே ஒரு பிரதமர் வேட்பாளர் உருவாக முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset