செய்திகள் உலகம்
“வேலைக்கு மக்கள் நடந்து செல்கிறார்களா”?: பிலிப்பைன்ஸ் பெட்ரோல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
மனிலா:
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் பிலிப்பைன்ஸில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் வேலைக்கு நடந்து செல்வதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளை அந்நாட்டு மக்கள் மறுத்துள்ளனர். குறிப்பாக, கியூசான் சிட்டியின் 'காமன்வெல்த் அவென்யூ' பகுதியில் மக்கள் நடந்து செல்லும் காணொலியைப் பகிர்ந்து, வெளிநாட்டவர் ஒருவர் பதிவிட்ட தவறான தகவலே இந்த சர்ச்சைக்குக் காரணமாகியுள்ளது.
உண்மையில், அங்குள்ள மக்கள் வேலைக்கு நடந்து செல்லவில்லை என்றும், மாறாகப் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்காகக் காத்திருப்பதாகவும் பிலிப்பைன்ஸ் மக்கள் விளக்கமளித்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல், வாகனப் பற்றாக்குறை காரணமாக, மக்கள் தங்களுக்குத் தகுந்த வாகனத்தைப் பிடிப்பதற்காகவே சிறிது தூரம் நடந்து செல்வதாகவும், இது அங்கு வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து அங்குள்ள போக்குவரத்து சங்கங்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சாலைகளில் பொதுப் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதே தவிர, எரிபொருள் இல்லாததால் மக்கள் நடக்கவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, தொடர்ந்து மூன்றாவது வாரமாக எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் போக்குவரத்துத் துறையினர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு, உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது பிலிப்பைன்ஸிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல வாகன ஓட்டிகள் தங்கள் சேவையைத் தொடர முடியாமல் தவித்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 11:07 am
சுங்கச்சாவடி அமைப்பு மூலம் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துகிறது ஈரான்
March 27, 2026, 10:38 am
“கழிப்பறை காகிதப் பற்றாக்குறையால் பதற்றம் தேவையில்லை”: மக்களிடம் ஜப்பான் அரசின் வேண்டுகோள்
March 27, 2026, 10:32 am
மேற்காசிய மோதல்: ஈரான் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்கள் ஒத்திவைக்கிறார் டிரம்ப்
March 26, 2026, 5:33 pm
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி
March 26, 2026, 4:30 pm
சிங்கப்பூர் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு முக அடையாள முறை அறிமுகம்
March 26, 2026, 4:27 pm
ஜப்பான் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்: மதிய உணவால் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு
March 26, 2026, 4:22 pm
தாய்லாந்தில் எரிபொருள் ஏற்றுமதிக்கு அரசு கடும் கட்டுப்பாடு
March 26, 2026, 4:20 pm
வங்காளதேசத்தில் கோர விபத்து: 40 பயணிகளுடன் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து
March 26, 2026, 12:21 pm
