நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

“கழிப்பறை காகிதப் பற்றாக்குறையால் பதற்றம் தேவையில்லை”: மக்களிடம் ஜப்பான் அரசின் வேண்டுகோள்

ஜப்பான்: 

மேற்காசியாவில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, கழிப்பறை காகிதங்களை திடீரென அதிக அளவில் வாங்க வேண்டாம் என ஜப்பான் அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான சில பதிவுகள் காரணமாக அத்தியாவசிய பொருட்களை மக்கள் குவித்து சேமித்து வருகிறார்கள் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

பொருளாதாரம், வர்த்தகம், தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சரியான தகவல்களின் அடிப்படையில் நிதானமாகவே வாங்குதல் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற பதட்டம் நிலைமையை மோசமாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக 1973-ஆம் ஆண்டின் எண்ணெய் நெருக்கடி, 2011-ஆம் ஆண்டு நிலநடுக்கம், சுனாமி, மேலும் கோவிட்19 தொற்று பரவல் காலங்களில் இதேபோன்ற சேமிப்பு நிலை ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் சில கடைகளில் கழிப்பறை டிஷ்யூ தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், மக்கள் அதிக அளவில் வாங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயினும், ஜப்பான் இல்லப் பயன்பாட்டு காகிதத் தொழில் சங்கம் தெரிவித்ததாவது, நாட்டில் பயன்படும் கழிப்பறை திசுவின் 97 சதவீதம் உள்நாட்டிலேயே மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் தயாரிக்கப்படுவதால், மேற்காசியாவிலிருந்து விநியோகத்துக்கு சார்ந்திருக்கவில்லை.

தற்போதைய உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்றும், தேவையெனில் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கால்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset