செய்திகள் உலகம்
மேற்காசிய மோதல்: ஈரான் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்கள் ஒத்திவைக்கிறார் டிரம்ப்
வாஷிங்டன்:
மேற்காசிய பதற்றங்களைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், ஈரானின் எரிசக்தி இடங்களைத் தாக்கும் திட்டங்களை மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் இந்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்படுவதாக டிரம்ப் தமது ட்ருத் ஊடகத் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
"ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இரவு 8 மணி வரை ஏப்ரல் 6, 2026 திங்கள் வரை 10 நாட்களுக்கு எரிசக்தி நிலையங்களை அழிக்கும் காலகட்டத்தை ஒத்திவைப்பதாக இந்த அறிக்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவந்துள்ளது.
"பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, போலி ஊடக அறிக்கைகளுக்கு மாறாக அவை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன" என்று அவர் தெரிவித்தார்.
தற்போதைய ஒத்திவைப்பு வெள்ளியன்று முடிவடைய திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் வியாழக்கிழமை மாலை பங்குச் சந்தைகள் மூடியவுடன் இந்தப் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வாஷிங்டன், தெஹ்ரான் பதற்றங்களைத் தணிக்கும் கலந்தாலோசனைகளைத் தொடரும் நிலையில், இந்த ஒத்திவைப்பு ஒரு முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 11:07 am
சுங்கச்சாவடி அமைப்பு மூலம் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துகிறது ஈரான்
March 27, 2026, 10:38 am
“கழிப்பறை காகிதப் பற்றாக்குறையால் பதற்றம் தேவையில்லை”: மக்களிடம் ஜப்பான் அரசின் வேண்டுகோள்
March 26, 2026, 5:33 pm
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி
March 26, 2026, 4:30 pm
சிங்கப்பூர் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு முக அடையாள முறை அறிமுகம்
March 26, 2026, 4:27 pm
ஜப்பான் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்: மதிய உணவால் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு
March 26, 2026, 4:22 pm
தாய்லாந்தில் எரிபொருள் ஏற்றுமதிக்கு அரசு கடும் கட்டுப்பாடு
March 26, 2026, 4:20 pm
வங்காளதேசத்தில் கோர விபத்து: 40 பயணிகளுடன் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து
March 26, 2026, 12:21 pm
