செய்திகள் தமிழ் தொடர்புகள்
பாஜக வேட்பாளர்கள் உறுதிசெய்யும் ஆலோசனை கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்தார்
சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை இறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையொப்பமான நிலையில், நேற்று தொகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது.
பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில மூத்த தலைவர்கள் கலந்துகொண்டிருக்கும் நிலையில், அண்ணாமலை பங்கேற்கவில்லை. கூட்டத்தை அவர் புறக்கணித்துள்ளார்.
இதனிடையே, அண்ணாமலை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அரவக்குறிச்சி அல்லது கோவை சிங்காநல்லூர் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
இதன்மூலம், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 3:24 pm
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
