செய்திகள் தமிழ் தொடர்புகள்
சோனியா காந்தி விரைந்து நலம் பெற வேண்டுகிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைந்து நலம் பெற விழைகிறேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வயிறு மற்றும் சிறுநீர்ப் பாதையில் தொற்று குறித்த பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் ஓரிரு நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றும் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில், காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி மார்ச் 24 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு வயிறு, சிறுமீர் பாதையில் தொற்று இருப்பது குறித்து பரிசோத்னைகள் செய்யப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல் முழுவதும் பரவிய தொற்றுக்காக அவருக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விசாரித்து வரும் நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து கவலைகொள்கிறேன்.
சோனியா காந்தி, விரைவில் நல்ல உடல்நலத்துடன் திரும்புவார் என உறுதியாக நம்புகிறேன். அவர் விரைவாகவும், முழுமையாகவும் நலம் பெற விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 3:24 pm
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
