செய்திகள் தமிழ் தொடர்புகள்
கடந்தமுறை பாஜக வென்ற இடங்களில் இம்முறை சீட் தரப்படவில்லை
சென்னை:
2026 தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் பாஜக, மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய தொகுதிகளில் களமிறங்குகிறது.
இதில், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் வேறு தொகுதிகளுக்கு மாறுவார்கள் என சொல்லப்படுகிறது.
கடந்த முறை 20 தொகுதிகளைப் பெற்ற பாஜக வெறும் 4 தொகுதிகளில்தான் வென்றது. அதிலும், மொடக்குறிச்சியில் சரஸ்வதி 281 வாக்குகள் வித்தியாசத்திலும், கோவை தெற்கில் வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்திலும் தான் வென்றார்கள்.
தமிழகம் முழுவதும் தங்களுக்கு செல்வாக்கு உள்ளதாக பாஜக சொல்லிக்கொண்டாலும், தற்போது பெற்றுள்ள தொகுதிகளின் அடிப்படையில் அந்தக் கட்சி, தென் மாவட்டங்களில்தான் அதிகம் போட்டியிடுகிறது. மற்றபடி, மத்திய மண்டலம், வட மண்டலம், சென்னை மண்டலத்தில் பாஜக மிக சொற்ப என்ணிக்கையில்தான் தொகுதிகளைப் பெற்றுள்ளது.
பெரும்பாலும், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையே பாஜக தேர்ந்தெடுத்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 3:24 pm
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
