செய்திகள் தமிழ் தொடர்புகள்
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை:
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், ‘நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இன்று (24-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ்நாட்டில் 10 (பத்து) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸுக்கு 28, விசிகவுக்கு 8, சிபிஎம் மற்றும் சிபிஐக்கு தலா 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், ஐயுஎம்எல், மமக,கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா இரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 3:24 pm
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
