செய்திகள் மலேசியா
துன் டாய்ம் ஜைனுடினின் நான்கு பிள்ளைகள் ஏப்ரல் 6ஆம் தேதி ஏம்ஏசிசியிடம் வாக்குமூலம் அளிக்க உள்ளனர்
புத்ராஜெயா:
முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடினின் நான்கு பிள்ளைகளும் ஏப்ரல் 6 அன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளிக்க ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அனைவரும் ஆஜராவார்கள் என அவர்களது வழக்கறிஞர்கள் உறுதியளித்துள்ளதாக ஏம்ஏசிசி சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு இயக்குநர் முகமது சம்ரி ஜைனுல் அபிதின் தெரிவித்தார்.
இந்த உறுதிமொழியை ஏம்ஏசிசி கவனத்தில் எடுத்துக்கொள்கிறது.
சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள் என நம்புகிறது.
வாக்குறுதியளித்தபடி எந்தவொரு நபரும் ஆஜராகத் தவறினால், சட்ட விதிகளுக்கு இணங்க அடுத்தகட்ட நடவடிக்கை பரிசீலிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட அந்த நான்கு நபர்கள் அஸ்னிடா, முகமது வீரா டானி, முகமது அமீர் ஜைனுடின், முகமது அமீன் ஜைனுடின் ஆவர்.
முன்னதாக, சொத்து விவரங்கள் தொடர்பான இரண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு அவர்கள் பதிலளிக்கத் தவறியதை அடுத்து, அவர்களைக் கண்டுபிடிப்பதற்காக ஊழல் தடுப்பு ஆணையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 5:46 pm
கெடாவின் சுல்தான், அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர் அரசு ஊழியர்களுடன் அய்டில்ஃபித்ரி வரவேற்பு
March 24, 2026, 5:44 pm
"நடுக்கடலில் எரிபொருள் கொள்ளையா?": மலேசியக் கடற்பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் சிறைபிடிப்பு
March 24, 2026, 5:40 pm
மலேசியா வரலாற்றிலேயே மிகவும் கடுமையான எல் நினோ வெப்பத்தால் தாக்கப்பட உள்ளது
March 24, 2026, 5:39 pm
சபாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை; விநியோகத்தில் தாமதம் மட்டுமே: அர்மிசான்
March 24, 2026, 5:12 pm
"நீர் திவால் நிலையில் மலேசியா இல்லை": துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் அறிவிப்பு
March 24, 2026, 4:24 pm
"நாங்க உயிரோடுதான் இருக்கோம்": மகனின் செயலால் கதறிய பெற்றோர்
March 24, 2026, 4:19 pm
