நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை; விநியோகத்தில் தாமதம் மட்டுமே: அர்மிசான்

புத்ராஜெயா:

சபாவில் பெட்ரோல், டீசல், கேஸ் (எல்பிஜி) பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை.

மாறாக, தளவாடச் சிக்கல்கள், பண்டிகைக் காலங்களில் அதிகரித்த தேவை காரணமாகப் பல இடங்களில் விநியோகத்தில் தாமதம் மட்டுமே ஏற்பட்டதாக உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிசான் முகமது அலி கூறினார்.

நாட்டில் எரிபொருள் விநியோக நிலைமை சீராகவும் போதுமானதாகவும் உள்ளது.

விநியோகத் தடைகளை எதிர்கொண்ட வட்டாரங்களில் பல நாடுகளை விட இது சிறப்பாக உள்ளது.

குறிப்பாக இன்று வரை நாட்டில் பெட்ரோல், டீசல், எல்பிஜி எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என அவர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

சரக்கு விநியோகம் தொடர்பான ஒரு தனிப்பட்ட சிக்கல் எழுந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, குறிப்பாக தேவை அதிகரித்திருந்த பண்டிகைக் காலங்களில், பல இடங்களில் பல மணிநேர விநியோகத் தாமதத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சிக்கல் சரிசெய்யப்பட்டுவிட்டது. பொருட்கள் தடையின்றி சென்றடைவதை உறுதிசெய்ய தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே மக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்கத் தேவையில்லை என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset