நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா வரலாற்றிலேயே மிகவும் கடுமையான எல் நினோ வெப்பத்தால் தாக்கப்பட உள்ளது

கோலாலம்பூர்:

மலேசியா வரலாற்றிலேயே மிகவும் கடுமையான  எல் நினோ வெப்பத்தால் தாக்கப்பட உள்ளது.

காலநிலை மாற்ற வல்லுநரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான டாக்டர் ஃபிரடோலின் டங்காங் இதனை கூறினார்.

எல்-நினோ நிகழ்வு, புவி வெப்பமயமாதலின் விளைவுகள் காரணமாக, இந்த ஆண்டு உலகின் மிக வெப்பமான வெப்பநிலை பதிவாகும்.

எல்-நினோ காலகட்டமானது புவி வெப்பநிலையை அதிகரிக்கும் திறன் கொண்டது.

1.55 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு உலகின் மிக வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டது.

லா நினா நிகழ்வின் (உலகளாவிய காலநிலை சுழற்சியில் ஏற்படும் ஒரு குளிர் நிலை) தாக்கமாகும்.

இது 2025ஆம் ஆண்டில் வெப்பநிலை 2024ஆம் ஆண்டை விட சற்றே குறைவாக இருந்தது.

இருப்பினும், புவி வெப்பமயமாதலின் விளைவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த ஆண்டின் உலகளாவிய வெப்பநிலை, இதுவரை பதிவானவற்றில் மூன்றாவது வெப்பமான ஆண்டாக அமைந்துள்ளது.

இந்த தென்மேற்குப் பருவத்தில் எல்-நினோ தோன்றுவதற்கான நிகழ்தகவு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த நிகழ்தகவு சுமார் 80 முதல் 90 சதவீதம் வரை அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset