செய்திகள் மலேசியா
ஊழல் விவகாரத்தை தீர்க்க உதவுவதாகக் கூறி 9.5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர்:
ஊழல் விவகாரத்தை தீர்க்க உதவுவதாகக் கூறி 9.5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டப்பட்டு உள்ளது.
பெருநிறுவன மாபியா ஊழலின் மையப் புள்ளியாக தொழிலதிபர் விக்டர் சின் மாறினார்.
இந்நிலையில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உதவுவதாக உறுதியளித்ததாகக் கூறப்படும் கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது 9.5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பணம் திருப்பித் தரப்படாவிட்டால், அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் மிரட்டினார்.
நிகழ்வுகளின் காலவரிசையை விவரிக்கும் 40 பக்க ஆவணத்தில், பெயர் குறிப்பிடப்படாத அந்த நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு பெருநிறுவன ம்பியா கும்பலுடன் பேசி விக்டரின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, 10 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணத்தை ஏற்பாடு செய்யுமாறு தன்னிடம் கேட்டதாக சின் கூறியுள்ளார்.
விக்டர் ஆரம்பத்தில் 9.5 மில்லியன் ரிங்கிட்டை ஏற்பாடு செய்தார்.
ஆனால் மீதமுள்ள 500,000 ரிங்கிட் அவரிடம் ஒருபோதும் ஒப்படைக்கப்படவில்லை.
ஏனெனில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்டரின் பிரச்சினையைத் தீர்க்கவில்லை.
அதே வேளையில் அந்தப் பெருநிறுவன மாஃபியா கும்பலுக்கு ஒருபோதும் பணம் ஒப்படைக்கப்படவில்லை.
இதன் அடிப்படையில் விக்டர் அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார்:
தயவுசெய்து 9.5 மில்லியன் ரிங்கிட்டை 2026 மார்ச் 30ஆம் தேதிக்குள் திருப்பித் தாருங்கள்.
இல்லையெனில் உங்கள் அடையாளத்தை நான் வெளிப்படுத்திவிடுவேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 5:46 pm
கெடாவின் சுல்தான், அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர் அரசு ஊழியர்களுடன் அய்டில்ஃபித்ரி வரவேற்பு
March 24, 2026, 5:44 pm
"நடுக்கடலில் எரிபொருள் கொள்ளையா?": மலேசியக் கடற்பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் சிறைபிடிப்பு
March 24, 2026, 5:40 pm
மலேசியா வரலாற்றிலேயே மிகவும் கடுமையான எல் நினோ வெப்பத்தால் தாக்கப்பட உள்ளது
March 24, 2026, 5:39 pm
சபாவில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை; விநியோகத்தில் தாமதம் மட்டுமே: அர்மிசான்
March 24, 2026, 5:12 pm
"நீர் திவால் நிலையில் மலேசியா இல்லை": துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் அறிவிப்பு
March 24, 2026, 4:24 pm
"நாங்க உயிரோடுதான் இருக்கோம்": மகனின் செயலால் கதறிய பெற்றோர்
March 24, 2026, 4:19 pm
