செய்திகள் தமிழ் தொடர்புகள்
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை:
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, கொமதேக கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், இன்று விசிக தொகுதிப் பங்கீடும் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, திமுக கூட்டணியிலுள்ள விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 6 பொதுத் தொகுதிகள், 2 தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இன்று (மார்ச் 24) இந்த தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தமுறை கூடுதல் தொகுதிகளைப் பெறுவதில் உறுதியாக இருந்த விசிக 2 தொகுதிகளை அதிகமாக பெற்றிருக்கிறது.
திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸுக்கு 28, விசிகவுக்கு 8, இந்திய கம்யூனிஸ்ட் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொமதேக 2 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நாளை தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 11:16 am
50 ஆடுகள் பலியிடப்பட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து
March 23, 2026, 12:21 pm
மாணவர்களின் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி: தமிழக அரசின் ‘மனநலக் காப்பு’ திட்டம்
March 22, 2026, 1:04 pm
தமிழகத்தில் சோப்பு, டிடர்ஜென்ட் விலை அதிகரிப்பு: சிறு தொழில் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
March 20, 2026, 8:18 pm
புதுவை முதல்வர் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல்
March 19, 2026, 10:22 pm
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: தனியாகக் கிடந்த சூட்கேஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது
March 19, 2026, 10:21 pm
“சிறை திருத்த மையமா, குற்ற மையமா?”: சீமான் கேள்வி
March 19, 2026, 10:19 pm
