நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

30 ஆண்டுகளாக தலசீமியா நோயுடன் போராடும் 46 ஆடவர்

கோலாலம்பூர்:

தலசீமியா நோயுடன் பிறப்பது ஒருவரின் விருப்பமல்ல, ஆனால் அந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் சிகிச்சையைத் தொடர்வதே பலரின் அன்றாட வாழ்வாக உள்ளது. 

கோலாலம்பூரைச் சேர்ந்த 46 வயது நூர் அஸ்மி ரம்லி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நோயுடன் போராடி வரும் தனது வலியைப் பகிர்ந்துள்ளார். தனது 15 வயதில் நோய் கண்டறியப்பட்டதில் இருந்து, உடல் மெலிந்து வயிறு வீக்கமடைந்தது முதல், ஒரு கண்ணின் பார்வையை இழந்தது வரை பல கடுமையான உடல்நலச் சிக்கல்களை அவர் சந்தித்துள்ளார்.

தற்போது நாளொன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை உட்கொள்ளும் அவர், சுமார் ஆறு மணிநேரம் நீடிக்கும் இரத்த மாற்றச் சிகிச்சையையும் (Blood Transfusion) மேற்கொண்டு வருகிறார்.
 

"இரத்த மாற்றத்தின் இறுதி நிலையின் போது நரம்புகளில் ஏற்படும் வலி தாங்க முடியாதது" என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். நுரையீரல், கல்லீரல் தொற்று எனப் பலமுறை உயிருக்கே ஆபத்தான நிலைக்குச் சென்றபோதும், மன உறுதியுடன் அவர் மீண்டு வந்துள்ளார்.

இது குறித்து மலேசிய தேசிய பல்கலைக்கழக (UKM) மருத்துவமனையின் இரத்தவியல் நிபுணர் பேராசிரியர் டாக்டர் நூர் ரஃபியா துமியான் கூறுகையில், தலசீமியா நோயாளிகளுக்கு இரத்தம் செலுத்தும் முறை மிகவும் துல்லியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விளக்கினார். 

மேலும், பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு இந்த நோய் பரவாமல் தடுக்க, திருமணம் செய்யவிருக்கும் தம்பதியினர் முன்கூட்டியே இரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்றும், முறையான ஆலோசனைகள் மூலம் புதிய தலசீமியா பிறப்புகளைத் தவிர்க்கலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset