நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்ப அலை ஜூன் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா

கோலாலம்பூர்:

தற்போது நாட்டைத் தாக்கி வரும் வெப்ப அலை ஜூன் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மார்ச் நடுப்பகுதிக்கும் ஏப்ரல் நடுப்பகுதிக்கும் இடையில் வெப்பநிலை உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) தலைமை இயக்குநர் ஹிஷாம் அனிப்,

குறிப்பாக தீபகற்பத்தின் வடக்கு மாநிலங்களில் வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும்.

அவரைப் பொறுத்தவரை, வடகிழக்குப் பருவமழையின் முடிவில் மேகமூட்டம் குறைந்து, அப்பகுதியில் சூரியன் நேரடியாக உச்சியில் இருப்பதால் வெப்ப அலைகள் ஏற்படுவது ஒரு பொதுவான நிகழ்வாகும்.

இருப்பினும், காற்றின் போக்கு பலவீனமடைவதால், இந்த வார இறுதி முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும்.

இது பருவமழை மாற்றக் கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அடுத்த வாரம் இது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், வெப்பநிலை அதிகமாகவே இருக்கும்.

வெப்பமான இன்டோசீனா பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், மற்ற மாநிலங்களை விட வடக்குப் பகுதி அதிக வெப்பநிலையை அனுபவித்து வருவதாக மெட் மலேசிய கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset