செய்திகள் மலேசியா
படுக்கையறையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்: துர்நாற்றத்தால் வெளிச்சத்திற்கு வந்த மர்ம மரணம்
மலாக்கா:
மலாக்கா, குரூபோங் அடுக்குமாடிக் குடியிருப்பின் எட்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கடந்த சில நாட்களாகக் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார், இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
நேற்று மாலை 4:10 மணியளவில் தகவல் கிடைத்ததும், செங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு வீரர்கள் அடங்கிய குழுவினர் விரைந்து வந்து சோதனையிட்டனர்.
வீட்டின் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால், தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, வீட்டின் முதன்மைப் படுக்கையறையில் 46 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சக அதிகாரிகள், அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காகப் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாலை 4:35 மணியளவில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், இரவு 8:08 மணியளவில் மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. அந்த நபரின் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்துப் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 2:39 pm
இந்தோனேசிய அதிபரை விரைவில் சந்திக்கும் பிரதமர் அன்வார்
March 24, 2026, 2:37 pm
30 ஆண்டுகளாக தலசீமியா நோயுடன் போராடும் 46 ஆடவர்
March 24, 2026, 2:35 pm
மறுசுழற்சி பொருட்களைச் சேகரித்துத் தன் பார்வையை மீட்டெடுத்த முதியவர்
March 24, 2026, 1:44 pm
தனிப்பட்ட நலன்கள் கெராக்கானை பலவீனப்படுத்தக்கூடும்: டோமினிக் லாவ்
March 24, 2026, 1:42 pm
வெப்ப அலை ஜூன் மாதம் வரை நீடிக்கும்: மெட் மலேசியா
March 24, 2026, 12:19 pm
பெங்கெராங்கில் 4-வது நாளாகத் தொடரும் தீப்பிழம்பு
March 24, 2026, 11:36 am
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேர் கைது: போலிஸ்
March 24, 2026, 11:35 am
