செய்திகள் தொழில்நுட்பம்
காப்புரிமைப் போர்: சீனத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே முற்றிய மோதல்
ஷென்சென்:
உலகின் முன்னணி ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான டி.ஜே.ஐ, தனது முன்னாள் பொறியாளர்கள் உருவாக்கிய தொழில்நுட்பத் திருட்டு தொடர்பாக இன்ஸ்டா360 நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
ட்ரோன் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பம், படப் செயலாக்கம் தொடர்பான ஆறு காப்புரிமைகளை இன்ஸ்டா360 சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதாக டி.ஜே.ஐ குற்றம் சாட்டியுள்ளது. தனது நிறுவனத்திலிருந்து விலகிய ஓராண்டு காலத்திற்குள் அந்தப் பணியாளர்கள் உருவாக்கிய கண்டுபிடிப்புகள் சட்டப்படி தங்களுக்கே சேரும் என டி.ஜே.ஐ வாதிடுகிறது.
இருப்பினும், இந்தத் தடையற்ற குற்றச்சாட்டுகளை இன்ஸ்டா360 நிறுவனத்தின் நிறுவனர் ஜே.கே. லியு வன்மையாக மறுத்துள்ளார். இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் தனது குழுவின் சொந்த உழைப்பால் உருவானவை என்றும், மாறாக டி.ஜே.ஐ நிறுவனமே தங்களின் பல சிறப்பம்சங்களைப் பிரதி எடுத்துள்ளதாகவும் அவர் எதிர்வாதம் செய்துள்ளார்.
டி.ஜே.ஐ நிறுவனம் தங்கள் தரப்பு 28 காப்புரிமைகளை மீறியுள்ள போதிலும், வழக்குகளில் நேரத்தைச் செலவிடாமல் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவதாலேயே தாம் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரோன்கள், சிறிய ரகக் கேமராக்கள், ஒலிவாங்கிகள் எனப் பல துறைகளில் இவ்விரு நிறுவனங்களும் நேரடியாகப் போட்டியிட்டு வருகின்றன. குறிப்பாக, இன்ஸ்டா360 நிறுவனம் தனது புதிய 'ஆன்டிகிராவிட்டி ஏ1' ட்ரோனை மலேசிய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இந்த மோதல் சீனத் தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:13 am
தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்
September 10, 2026, 12:42 pm
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: iPhone18 Pro, 18 Pro Max மற்றும் போல்டபிள் மாடலான iPhone Duo அறிமுகம்
August 31, 2026, 9:40 pm
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
