செய்திகள் உலகம்
"பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை!": அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
இஸ்தான்புல்:
அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும், உலக நிதி, எண்ணெய் சந்தையைக் குழப்புவதற்காகவே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகவும் ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முஹம்மத் பாகர் கலிபாஃப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் சந்தித்து வரும் உள்நாட்டு நெருக்கடிகளிலிருந்து திசைதிருப்பவே இத்தகைய போலிச் செய்திகள் பரப்பப்படுவதாக அவர் சாடினார்.
ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகாயி இது குறித்துக் கூறுகையில், நட்பு நாடுகள் மூலமாகப் போர் நிறுத்தத்திற்கான கோரிக்கைகளை அமெரிக்கா முன்வைத்ததாகவும், அதற்கு ஈரான் தனது நிலையான கொள்கையையே பதிலாக வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் எரிசக்தி, அடிப்படை உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு ராணுவ ரீதியாக மிகக் கடுமையான, உடனடி பதிலடி கொடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்கள், உலகளாவிய விமானப் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், கடந்த 24 நாட்களாக அமெரிக்காவுடன் எந்தவித நேரடிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்பதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 11:57 am
லண்டலில் பரபரப்பு: யூத வழிபாட்டுத் தலம் அருகே தீவைப்புச் சம்பவம்
March 24, 2026, 11:56 am
காலம் கடந்தும் நிலைக்கும் காதல்: மனைவியின் கடைசி நிமிடம் வரை போராடிய 82 வயது கணவர்
March 24, 2026, 11:47 am
"இளைஞர்களின் உயிருடன் விளையாடாதீர்கள்": ராணுவ அதிகாரிகளைச் சாடிய அதிபர் பீட்ரோ
March 24, 2026, 10:52 am
ஒப்பந்தம் ஏற்பட்டால் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும்
March 24, 2026, 10:28 am
பெரு நாட்டில் பயங்கர சாலை விபத்து: 13 பேர் உயிரிழப்பு
March 23, 2026, 8:40 pm
பணியாத ஈரான்: வேறுவழியின்றி 48 மணி நேரக் காலக்கெடுவைக் கைவிட்டார் அதிபர் டிரம்ப்
March 23, 2026, 4:27 pm
புனித மக்கா ரமலான் சிறப்பு: 33.8 மில்லியன் மக்களுக்கு இப்தார் விருந்து
March 23, 2026, 3:58 pm
ஈரானில் உள்ள தப்ரிஸ் நகரில் நடந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு
March 23, 2026, 3:56 pm
