செய்திகள் உலகம்
ஒப்பந்தம் ஏற்பட்டால் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும்
ஹாமில்டன்:
தெஹ்ரானுடன் ஒப்பந்தம் ஏற்பட்டால், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாஷிங்டன் எடுத்துக்கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
நேற்றுதான் பேச்சுவார்த்தையின் சமீபத்திய சுற்று நடைபெற்றதாகவும் டிரம்ப் வலியுறுத்தியபோதும் தெஹ்ரான் இந்தக் கூற்றை மறுத்துள்ளது.
"அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால், நாங்கள் அங்கு சென்று அதை (யுரேனியத்தை) நாங்களே எடுத்துக்கொள்வோம்," என்று டிரம்ப் கூறினார், மேலும் இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டிற்கு வர விரும்புகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க, ஈரானிய அதிகாரிகள் விரைவில் நேருக்கு நேர் சந்திப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.
ஈரானின் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதலுக்கு ஐந்து நாட்கள் தாமதமானதும் குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்தார், பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் அடுத்த நடவடிக்கையைத் தீர்மானிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மேலும் தொலைபேசி உரையாடல்கள் நடக்க வாய்ப்புள்ளதை அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அமெரிக்காவின் கவலைகளைத் தூண்டுகின்றதால் டெஹ்ரான், வாஷிங்டனுக்கு இடையே ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 12:14 pm
"பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை!": அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
March 24, 2026, 11:57 am
லண்டலில் பரபரப்பு: யூத வழிபாட்டுத் தலம் அருகே தீவைப்புச் சம்பவம்
March 24, 2026, 11:56 am
காலம் கடந்தும் நிலைக்கும் காதல்: மனைவியின் கடைசி நிமிடம் வரை போராடிய 82 வயது கணவர்
March 24, 2026, 11:47 am
"இளைஞர்களின் உயிருடன் விளையாடாதீர்கள்": ராணுவ அதிகாரிகளைச் சாடிய அதிபர் பீட்ரோ
March 24, 2026, 10:28 am
பெரு நாட்டில் பயங்கர சாலை விபத்து: 13 பேர் உயிரிழப்பு
March 23, 2026, 8:40 pm
பணியாத ஈரான்: வேறுவழியின்றி 48 மணி நேரக் காலக்கெடுவைக் கைவிட்டார் அதிபர் டிரம்ப்
March 23, 2026, 4:27 pm
புனித மக்கா ரமலான் சிறப்பு: 33.8 மில்லியன் மக்களுக்கு இப்தார் விருந்து
March 23, 2026, 3:58 pm
ஈரானில் உள்ள தப்ரிஸ் நகரில் நடந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு
March 23, 2026, 3:56 pm
