நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெரு நாட்டில் பயங்கர சாலை விபத்து: 13 பேர் உயிரிழப்பு

அரேகிபா:

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் திங்கட்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில், வேன், டிரெய்லர் லாரி மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து அரேகிபா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இடம்பெற்றது.

சுகாதார அதிகாரி வால்தர் ஒபோர்டோ கூறுகையில், சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து லிமா தலைநகரிலிருந்து 1,100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆண்டிஸ் மலைப்பகுதியில் அமைந்த சான் ஆன்டோனியோ டி சுகா என்ற சிறிய நகரின் அருகே நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட லாரி பிரேசில் பதிவெண் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களில் இருவரின் அடையாளம் மட்டுமே இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset