செய்திகள் தமிழ் தொடர்புகள்
50 ஆடுகள் பலியிடப்பட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேட்டைக்காரன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறிவிருந்து விழாவில் 50 ஆடுகள் பலியிடப்பட்டு, 100 கிலோ மூட்டை அரிசியில் சாதம் தயார் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பல நூறு ஆண்டுகளாக பங்குனி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.
இந்தத் திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் யாரும் பங்கேற்க அனுமதி கிடையாது.
விழாவில் ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படும். இவ்வாண்டிற்கான, விழாவையொட்டி நேற்று(மார்ச் 23) இரவு 1 மணிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாட்டை துவக்கினர்.
பின்னர், நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன.100 கிலோ மூட்டை அரிசியில் சாதம் தயாரானது.
இந்தக் கறி விருந்தில் அங்கு கூடியிருந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பறிமாறப்பட்டது.
இன்று நடந்த கறி விருந்தில் புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 3:24 pm
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
