செய்திகள் தமிழ் தொடர்புகள்
மாணவர்களின் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி: தமிழக அரசின் ‘மனநலக் காப்பு’ திட்டம்
சென்னை:
தமிழகக் கல்வி நிலையங்களில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகள், மனச்சோர்வு குறித்த புகார்கள் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன.
இதனை வேரோடு களையும் நோக்கில், தமிழக அரசு ஒருங்கிணைந்த 'மாணவர் மனநலப் பாதுகாப்புக் கொள்கை' திட்டத்தை அறிவித்துள்ளது. கல்வி என்பது வெறும் பாடப்புத்தக அறிவோடு நின்றுவிடாமல், ஒரு மாணவனின் உளவியல் பலத்தையும் உள்ளடக்கியது என்பதை இக்கொள்கை முதன்மையாக வலியுறுத்துகிறது.
குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி டாக்டர் வினீத் தலைமையிலான உயர்மட்டக் குழு, கல்வி, சட்டம், மனநலத் துறை வல்லுநர்களுடன் இணைந்து பல மாதங்களாக ஆய்வு செய்து இந்தத் தீர்வுகளை வடிவமைத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளிகள், கல்லூரிகளில் வெறும் பெயரளவில் அன்றி, செயல்பாட்டு ரீதியான மனநல ஆலோசனை மையங்கள் கட்டாயமாக்கப்படுகின்றன.
மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் அழுத்தங்களைப் பகிர்ந்து கொள்ள 'தோழமை குழுக்கள்' (Peer Support) உருவாக்கப்படுவது இக்கொள்கையின் ஒரு தனிச்சிறப்பாகும்.
மேலும், அவசர காலங்களில் உடனடி உதவியைப் பெற 14416, 14417, 104, 1098, 181 போன்ற உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே மாற்றப்பட உள்ளது. இது போன்ற முறையான வழிகாட்டல்கள் இருந்தால், இக்கட்டான சூழலில் இருக்கும் ஒரு மாணவன் தவறான முடிவை எடுப்பதிலிருந்து தடுக்கப்படுவான் என்பது அரசின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
மாணவர்களை மட்டும் குறிவைக்காமல், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் மனநலப் பயிற்சிகள் வழங்க இக்கொள்கை வழிவகை செய்கிறது. மாணவர்களின் நடத்தையில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட முன்கூட்டியே கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ அல்லது உளவியல் சிகிச்சையை உடனடியாக வழங்க இத் திட்டம் ஒரு பாலமாக அமையும்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 3:24 pm
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
