நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

900ஆவது கோல் அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை

நியூயார்க்:

கால்பந்து வரலாற்றில் மிகவும் குறைந்த போட்டிகளில் அதிவேகமாக 900 கோல்களை அடித்து லியோனல் மெஸ்ஸி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

குறைந்த போட்டிகள் மட்டுமல்லாமல் குறைந்த வயதிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்பாக ரொனால்டோ 900 கோல்களை நிறைவு செய்திருக்கிறார்.

அந்தப் பட்டியலில் தற்போது மெஸ்ஸியும் இணைந்துள்ளார்.

ஜெஸ்ஸி இந்தர் மியாமி அணியில் விளையாடி வருகிறார். கான்காகேஃப் சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நாஷ்வெல்லியுடன் விளையாடினார்.
இந்தப் போட்டியில் 7ஆவது

நிமிஷத்தில் மெஸ்ஸி எதிரணியினர் சூழ்ந்திருந்தும் மிகவும் குறுகிய இடத்தில் இருந்தே கோல் அடித்து அசத்தினார்.

இந்தப் போட்டி 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.

இதன் மூலம் மெஸ்ஸி 900 கோல்களை 1,142 போட்டிகளில் அடித்துள்ளார்.

இதற்கு முன்பாக ரொனால்டோ 900 கோல்களை 1,236 போட்டிகளில் அடித்திருந்தார்.

மேலும், மெஸ்ஸி இந்த மைல்கல்லை 38 ஆண்டுகள் 268 நாள்களிலும் ரொனால்டோ 39 ஆண்டுகள் 213 நாள்களில் அடித்துள்ளார்கள்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset