செய்திகள் மலேசியா
மூன்று மாடிக் கடையில் தீ விபத்து: 70% சேதம்
கோலாலம்பூர்:
புக்கிட் பின்டாங் பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மரச்சாமான் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10.58 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததையடுத்து, ஜாலான் ஹாங் துவா, ஜாலான் துன் ராசாக் தீயணைப்பு நிலையங்களிலிருந்து குழுக்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் தரைத் தளம், இரண்டாம் தளம் அதிகமாக பாதிக்கப்பட்டு, மரச்சாமான், வாசனைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட பகுதி சுமார் 70 சதவீதம் சேதமடைந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவாகாத நிலையில், தீ விபத்திற்கான காரணமும் மொத்த இழப்பும் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 10:45 am
தீபகற்பத்தின் 15 பகுதிகளில் வெப்பமான வானிலை நிலைகள் 1, 2ஆக பதிவாகியுள்ளன: மெட் மலேசியா
March 23, 2026, 10:43 am
நண்பகல் முதல் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கான போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும்: நெடுஞ்சாலை ஆணையம்
March 23, 2026, 10:42 am
கடும் வெப்பத்தால் 15 பேருக்குத் தொற்று உறுதி, குழந்தை ஒருவர் மரணம்: டாக்டர் சூல்கிப்லி
March 23, 2026, 10:41 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா, ரியல்மாட்ரிட் வெற்றி
March 23, 2026, 10:39 am
வெப்பநிலை உயர்வு:15 பகுதிகளில் கண்காணிப்பு நிலை அறிவிப்பு
March 23, 2026, 10:22 am
புனித நிலத்தில் நோன்பு திருநாள்: முதியோரின் மறக்கமுடியாத அனுபவம்
March 23, 2026, 10:09 am
ஓர் ஆண்டாக நீளும் சாலை பிரச்சினை: பொதுமக்கள் பாதுகாப்புக்கு கேள்விக்குறி
March 22, 2026, 6:41 pm
