செய்திகள் மலேசியா
வெப்பநிலை உயர்வு:15 பகுதிகளில் கண்காணிப்பு நிலை அறிவிப்பு
கோலாலம்பூர்:
மலேசிய வானிலை ஆய்வு துறை அறிவிப்பின்படி, தீபகற்ப மலேசியாவில் 15 பகுதிகள் வெப்ப நிலை எச்சரிக்கையில் உள்ளன.
இதில், கெடா மாநிலத்தின் படாங் டெராப் பகுதியில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி, இரண்டாம் நிலை வெப்பஅலை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெர்லிஸ், கெடா மாநிலத்தின் பல பகுதிகள் உள்ளிட்ட 14 இடங்கள் முதல் நிலை எச்சரிக்கை நிலையில் உள்ளன. இதேபோல், பினாங்கு, பேராக், பஹாங், நெகிரி செம்பிலான் மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானால் அது வெப்பஅலை எனவும், 35 முதல் 37 டிகிரி வரை இருந்தால் எச்சரிக்கை நிலை எனவும் வகைப்படுத்தப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உலக வானிலை தினத்தை முன்னிட்டு, துல்லியமான வானிலை கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மனித வாழ்வையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முக்கியமானவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பிற்காக தினமும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் வானிலை ஆய்வு துறை ஊழியர்களுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 11:29 am
மூன்று மாடிக் கடையில் தீ விபத்து: 70% சேதம்
March 23, 2026, 10:45 am
தீபகற்பத்தின் 15 பகுதிகளில் வெப்பமான வானிலை நிலைகள் 1, 2ஆக பதிவாகியுள்ளன: மெட் மலேசியா
March 23, 2026, 10:43 am
நண்பகல் முதல் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கான போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும்: நெடுஞ்சாலை ஆணையம்
March 23, 2026, 10:42 am
கடும் வெப்பத்தால் 15 பேருக்குத் தொற்று உறுதி, குழந்தை ஒருவர் மரணம்: டாக்டர் சூல்கிப்லி
March 23, 2026, 10:41 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா, ரியல்மாட்ரிட் வெற்றி
March 23, 2026, 10:22 am
புனித நிலத்தில் நோன்பு திருநாள்: முதியோரின் மறக்கமுடியாத அனுபவம்
March 23, 2026, 10:09 am
ஓர் ஆண்டாக நீளும் சாலை பிரச்சினை: பொதுமக்கள் பாதுகாப்புக்கு கேள்விக்குறி
March 22, 2026, 6:41 pm
