நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூடி 95 பெட்ரோல்; மடானி அரசாங்கம் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது: பிரதமர்

கோலாலம்பூர்:

மடானி அரசாங்கம் என்றுமே மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல்களால் உலக எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, அரசாங்க மானியங்கள் ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் சுமார் 700 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து  3.2 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்தன.

இந்த நாட்டின் மக்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த அதிகரிப்பு நடந்துள்ளது.

இதன் விளைவாக, இந்த மானியம் பூடி 95, டீசல் மூலம் செலுத்தப்படுவதால், மக்களும் பெரும்பாலான வர்த்தகர்களும் உண்மையான சந்தை விலையைச் செலுத்த வேண்டியதில்லை.

அதிகரித்து வரும் நிச்சயமற்ற உலகில், மக்களின் நலனையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளே மடானி அரசாங்கத்தின் முன்னுரிமையாகத் தொடர்கிறது, என்று டத்தோஸ்ரீ அன்வார் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

மலேசியா ஒரு எண்ணெய் உற்பத்தியாளராக இருக்கும்போது, ​​மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த நாட்டிலும் எண்ணெய் விலைகள் ஏன் பாதிக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பிய மக்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset