நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடும் வெப்பத்தால் 15 பேருக்குத் தொற்று உறுதி, குழந்தை ஒருவர் மரணம்: டாக்டர் சூல்கிப்லி

புத்ராஜெயா :

நாட்டில் வெப்பத்தாக்குதல் பாதிப்புகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, கடும் வெப்ப வானிலைக்கு எதிராக பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி அஹ்மத் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு முழுவதும், வெப்ப வானிலை தொடர்பான 15 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதில் ஒரு குழந்தையின் மரணமும் அடங்கும்.

தற்போதைய கடும் வெப்பமான வானிலை, உடல்நல அபாயங்கள், குறிப்பாக வெப்பத்தாக்கம் குறித்து நாம் அனைவரும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

நீண்ட நேர தலைச்சுற்றல், அதீத தாகம் மற்றும் அதிகரித்த உடல் வெப்பநிலை போன்ற வெப்பத்தாக்கத்தின் ஆரம்ப அறிகுறிகளைப் பொதுமக்கள் உடனடியாகக் கண்டறிய வேண்டும்.

இந்த அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக நிழலான இடத்தைக் கண்டுபிடித்து, நிறைய சுத்தமான தண்ணீரைக் குடித்து, உங்கள் உடலை உடனடியாகக் குளிர்ச்சியடையச் செய்யுங்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset