செய்திகள் மலேசியா
தீபகற்பத்தின் 15 பகுதிகளில் வெப்பமான வானிலை நிலைகள் 1, 2ஆக பதிவாகியுள்ளன: மெட் மலேசியா
கோலாலம்பூர்:
தீபகற்பத்தின் 15 பகுதிகளில் வெப்பமான வானிலை நிலைகள் 1, 2ஆக பதிவாகியுள்ளன.
மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) இதனை அறிவித்துள்ளது.
கெடாவில் உள்ள படாங் டெராப்பில் வெப்பமான வானிலை நிலை 2 (வெப்ப அலை), தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.
பெர்லிஸ் முழுவதும், பாலிங், சிக், பென்டாங், போகோக் சேனா, குபாங் பாசு, புலாவ் லங்காவி, கோலா மூடா மற்றும் கெடாவில் உள்ள பந்தர் பஹாரு ஆகிய பகுதிகள் உட்பட தீபகற்ப மலேசியாவில் உள்ள 14 பகுதிகள் முதல் நிலை (எச்சரிக்கை) நிலையில் உள்ளன.
வட கிழக்கு (பினாங்கு), உலு பேரா, கோலா கங்சார் (பேரா), ஜெராண்டுட் (பகாங்), ரெம்பாவ் (நெகிரி செம்பிலான்) ஆகிய பகுதிகளுக்கும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாகக் குறைந்தது மூன்று நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருப்பது வெப்ப அலை நிலை என்றும்,
தொடர்ச்சியாகக் குறைந்தது மூன்று நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருப்பது எச்சரிக்கை நிலை என்றும் மெட் மலேசியா வரையறுக்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 11:29 am
மூன்று மாடிக் கடையில் தீ விபத்து: 70% சேதம்
March 23, 2026, 10:43 am
நண்பகல் முதல் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கான போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும்: நெடுஞ்சாலை ஆணையம்
March 23, 2026, 10:42 am
கடும் வெப்பத்தால் 15 பேருக்குத் தொற்று உறுதி, குழந்தை ஒருவர் மரணம்: டாக்டர் சூல்கிப்லி
March 23, 2026, 10:41 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா, ரியல்மாட்ரிட் வெற்றி
March 23, 2026, 10:39 am
வெப்பநிலை உயர்வு:15 பகுதிகளில் கண்காணிப்பு நிலை அறிவிப்பு
March 23, 2026, 10:22 am
புனித நிலத்தில் நோன்பு திருநாள்: முதியோரின் மறக்கமுடியாத அனுபவம்
March 23, 2026, 10:09 am
ஓர் ஆண்டாக நீளும் சாலை பிரச்சினை: பொதுமக்கள் பாதுகாப்புக்கு கேள்விக்குறி
March 22, 2026, 6:41 pm
