செய்திகள் மலேசியா
நண்பகல் முதல் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கான போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும்: நெடுஞ்சாலை ஆணையம்
கோலாலம்பூர்:
நண்பகல் முதல் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கான போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும்என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மேலும் 30 'ஸ்மார்ட் லைன்' இடங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியது.
கிள்ளான் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் இன்று காலை போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டிலும் இருந்தது.
மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் பெருநாள் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு வீடு திரும்பத் தொடங்குவார்கள்.
இதனால் இன்று பிற்பகல் முதல் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வரை பிடோரிலிருந்து தாப்பா வரை செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் லேசான போக்குவரத்து நெரிசல் மட்டுமே உள்ளது.
மேலும், போக்குவரத்து சீராகச் செல்ல உதவும் வகையில், இன்று காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை 30 இடங்களில் பிளஸ் "ஸ்மார்ட் லைனை" செயல்படுத்தியுள்ளதாக அவ்வாணையம் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 11:29 am
மூன்று மாடிக் கடையில் தீ விபத்து: 70% சேதம்
March 23, 2026, 10:45 am
தீபகற்பத்தின் 15 பகுதிகளில் வெப்பமான வானிலை நிலைகள் 1, 2ஆக பதிவாகியுள்ளன: மெட் மலேசியா
March 23, 2026, 10:42 am
கடும் வெப்பத்தால் 15 பேருக்குத் தொற்று உறுதி, குழந்தை ஒருவர் மரணம்: டாக்டர் சூல்கிப்லி
March 23, 2026, 10:41 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா, ரியல்மாட்ரிட் வெற்றி
March 23, 2026, 10:39 am
வெப்பநிலை உயர்வு:15 பகுதிகளில் கண்காணிப்பு நிலை அறிவிப்பு
March 23, 2026, 10:22 am
புனித நிலத்தில் நோன்பு திருநாள்: முதியோரின் மறக்கமுடியாத அனுபவம்
March 23, 2026, 10:09 am
ஓர் ஆண்டாக நீளும் சாலை பிரச்சினை: பொதுமக்கள் பாதுகாப்புக்கு கேள்விக்குறி
March 22, 2026, 6:41 pm
