செய்திகள் மலேசியா
பினாங்கு மாநிலத்தில் நிலவும் ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிர்வாகங்களுடன் மஹிமா இணைந்து செயல்படும்: டத்தோ சிவக்குமார்
ஜார்ஜ்டவுன் :
பினாங்கு மாநிலத்தில் நிலவும் ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆலய நிர்வாகங்களுடன் மஹிமா இணைந்து செயல்படும்.
மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
மஹிமா யாருக்கும் போட்டி இல்லை. ஆலயங்களை ஒருங்கிணைப்பதே எனது முதன்மை இலக்காகும்.
நாட்டில் உள்ள இந்து ஆலயங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் மஹிமாவின் முதன்மை நோக்கமாகும்.
இதன் மூலம் ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.
இதன் அடிப்படையில்தான் நாடு தழுவிய நிலையில் மஹிமாவின் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் தான் மஹிமாவின் பயணம் பினாங்கு மாநிலத்தில் தொடர்கிறது.
குறிப்பாக இன்றைய சந்திப்புக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆலய நிர்வாகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதே வேளையில் 100 ஆலய நிர்வாகங்கள் மஹிமாவில் இணைவதற்கு விண்ணப்பம் செய்துள்ளன.
இங்குள்ள பல ஆலயங்கள் பல்வேறு பிரச்சினை எதிர்நோக்கி வருகின்றன. குறிப்பாக நிலப்பட்ட பிரச்சினையும் உள்ளன.
இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காண்பதற்கான வழிகள் முன்னெடுக்கப்படும்.
இதற்கு ஆலய நிர்வாகங்கள் எல்லாம் ஒரு குடையின்கீழ் இணைய வேண்டும். இது இக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் பினாங்கு மாநிலத்தில் நிலவும் ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிர்வாகங்களுடன் மஹிமா இணைந்து செயல்படும் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2026, 6:41 pm
பூடி 95 பெட்ரோல்; மடானி அரசாங்கம் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது: பிரதமர்
March 22, 2026, 6:40 pm
மலாய், இந்தியர்கள் இடையிலான சமாதான கூட்டம்; மஇகாவுக்கு அழைப்பில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 22, 2026, 6:39 pm
அனைத்துலக அரங்கில் இந்திய மாணவர்கள் மகத்தான சாதனை: டத்தோஶ்ரீ ரமணன் பாராட்டு
March 22, 2026, 6:38 pm
பாங்கி முச்சந்தி முனியாண்டி ஆலயத்தின் வருடாந்திர திருவிழா: விமரிசையாக நடைபெற்றது
March 22, 2026, 4:35 pm
சுங்கை பட்டாணியில் மின்சாரக் கம்பி திருட்டு: உடன்பிறந்த இரு ஆடவர் கைது
March 22, 2026, 4:26 pm
மஇகா மத்திய செயலவை என்ன முடிவெடுக்கும் என்று என்னால் சொல்ல முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 22, 2026, 1:20 pm
