நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புனித நிலத்தில் நோன்பு திருநாள்: முதியோரின் மறக்கமுடியாத அனுபவம்

தாப்பா: 

பொருளாதார ரீதியில் பின்தங்கிய ஆறு முதியோர், புனித மெக்கா, மதீனாவில் உம்ராப் பயணத்துடன் நோன்புப் பெருநாளை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த 12 நாள் பயணம் முழுமையாக தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் ஆதரவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

69 வயதான சாதியா அஹ்மத், இந்த வாய்ப்பு தனது வாழ்க்கையில் மிக முக்கியமானதாக இருப்பதாக தெரிவித்தார். “மெக்கா, மதீனாவில் திருநாளை கொண்டாடுவேன் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. முழு செலவையும் ஏற்று இந்த வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

இந்த பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஆறு பேரும் 65 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் உடல்நிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கடுமையான நோய்கள் எதுவும் இல்லையென உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூகப் பொறுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த உம்ரா பயண செலவுகளை முழுமையாக ஏற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உதவி, முதியோருக்கு மறக்கமுடியாத ஆன்மிக அனுபவமாக அமைந்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset