நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாங்கி முச்சந்தி முனியாண்டி ஆலயத்தின் வருடாந்திர திருவிழா: விமரிசையாக நடைபெற்றது

பாங்கி:

பாங்கி முச்சந்தி முனியாண்டி ஆலயத்தின் வருடாந்திர திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

பாங்கி லாமா வட்டாரத்தின் மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாக இந்த முச்சந்தி முனியாண்டி ஆலயம் விளங்குகிறது.

இவ்வாலயத்தின் வருடாந்திர திருவிழா இன்று நடைபெற்றது.

ஆலயத் தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் உட்பட பல அரசியல் தலைவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

பாங்கி முச்சந்தி முனியாண்டி ஆலயம் தனியார் நிலத்தில் உள்ளது.

இருந்தாலும் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் இவ்வாலயத்திற்கு இதுவதை எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

இதே போன்று ஆலயங்களை வைத்திருப்பவர் முறையாக ஆலயத்தை பதிவு செய்ய வேண்டும்.

நிர்வாகத்தை கொண்டு ஆலயத்தின் நிலத்தை முறையாக பதிவு செய்ய வேண்டும்.

இல்லையென்றால் பிற்காலத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று மஇகா முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் கேட்டு கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset