செய்திகள் மலேசியா
சுங்கை பட்டாணியில் மின்சாரக் கம்பி திருட்டு: உடன்பிறந்த இரு ஆடவர் கைது
சுங்கை பட்டாணி:
சுங்கை பட்டாணி, ஜாலான் துங்கு இப்ராஹிம் பகுதியில் உள்ள நிலத்தடி மின்சாரக் கம்பிகளைத் திருட முயன்ற உடன்பிறந்த இருவரைப் போலிசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மக்கள் ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களில் பரபரப்பாக இருந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, இவர்கள் இந்தத் துணிகரத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை 4.30 மணியளவில் கோலா மூடா மாவட்டக் காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கிருந்த நிலத்தடிப் பாதையின் மூடியைத் திறந்து இருவர் உள்ளே நுழைவதைக் கண்டு சந்தேகமடைந்த போலிசார், அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
சோதனையில் அவர்கள் அங்கிருந்த மின்சாரக் கம்பிகளை வெட்டித் திருட முயன்றது உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 42, 44 வயதுடைய அந்த இருவரிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விசாரணையில், இவர்கள் இருவரும் ஏற்கனவே தலா 12 போதைப்பொருள் தொடர்பான குற்றப் பின்னணிகளைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 22, 2026, 6:41 pm
பூடி 95 பெட்ரோல்; மடானி அரசாங்கம் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது: பிரதமர்
March 22, 2026, 6:40 pm
மலாய், இந்தியர்கள் இடையிலான சமாதான கூட்டம்; மஇகாவுக்கு அழைப்பில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 22, 2026, 6:39 pm
அனைத்துலக அரங்கில் இந்திய மாணவர்கள் மகத்தான சாதனை: டத்தோஶ்ரீ ரமணன் பாராட்டு
March 22, 2026, 6:38 pm
பாங்கி முச்சந்தி முனியாண்டி ஆலயத்தின் வருடாந்திர திருவிழா: விமரிசையாக நடைபெற்றது
March 22, 2026, 4:26 pm
மஇகா மத்திய செயலவை என்ன முடிவெடுக்கும் என்று என்னால் சொல்ல முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 22, 2026, 1:20 pm
