நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய், இந்தியர்கள் இடையிலான சமாதான கூட்டம்; மஇகாவுக்கு அழைப்பில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

பாங்கி:

மலாய், இந்தியர்கள் இடையிலான சமாதான கூட்டத்தில் பங்கேற்க மஇகாவுக்கு அழைப்பில்லை.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

நாட்டில் ஆலயம், இந்து சமயம் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மலாய், இந்தியர்கள் இடையிலான ஒரு சமாதான கூட்டம் புத்ராஜெயாவில் நடந்தது.

மக்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்பட்ட இக்கூட்டம் அவசியமானது. இக்கூட்டத்தை மஇகா வரவேற்கிறது.

ஆனால் இக்கூட்டத்தில் பங்கேற்க மஇகாவுக்கு எந்த அழைப்பும் வரவில்லை.

தாப்பா  நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் டத்தோஸ்ரீ சரவணனுக்கு அழைப்பு வந்தது.

இந்நிலையில் இக்கூட்டம் தொடர்பில் ஒரு சில சர்ச்சைகள் எழுந்துள்ளது.

குறிப்பாக சர்ச்சையானவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டது தான் பிரச்சினை.

அதே வேளையில் அரசாங்கத்தில் இருந்து அமைச்சரோ வேறொரு தலைவர்களோ இதில் கலந்து கொள்ளவில்லை.

இவைகள் தான் தற்போதைய சர்ச்சைகளுக்கு முக்கிய காரணம்.

கூட்டங்கள் நடத்துவதில் தவறு இல்லை. ஆனால் கூட்டம் முறையாக நடைபெற வேண்டும்.

பாங்கியில் உள்ள முச்சந்தி முனியாண்டி ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவிற்கு பின் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset