நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் மகன் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது

மாரான்:

பகாங் மாநில எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் மகன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மாரன் மாவட்ட போலிஸ் தலைவர் வோங் கிம் வாய் இதனை கூறினார்.

பகாங்கில் எதிர்க்கட்சிப் பிரதிநிதி ஒருவரின் மகனான ஒரு பதின் வயது சிறுவன், ஒரு சிறுமி சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து,

தனது மலேசியக் கல்விச் சான்றிதழ் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த 17 வயது இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டான்.

அப்புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, மார்ச் மாதத் தொடக்கத்தில் இங்குள்ள ஒரு வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறியதாகவும், பண்டார் மாரனில் புதிதாகச் சந்தித்த சந்தேக நபருடன் அந்தச் சிறுமி நடைப்பயிற்சிக்குச் சென்ற பிறகு இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அவர் கூறினார்.

பின்னர் அந்தச் சந்தேக நபர், பாதிக்கப்பட்ட சிறுமியை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், போலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படுவதற்கு முன்பே, பாதிக்கப்பட்டவர் நேற்று இந்தச் சம்பவம் குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார்..

இருப்பினும், நேற்று கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வாக்குமூலத்தை போலிசார் பதிவு செய்து முடித்த பின்னர், அவர் இன்று விடுவிக்கப்பட்டார் என்று கிம் வாய் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset