நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளிப்படையாக வாக்குவாதம் செய்வதை குவாங் எங், சோ நிறுத்த வேண்டும்: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

மாநிலத்தின் நில வரிப் பிரச்சினை தொடர்பாக முன்னாள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தற்போதைய முதல்வர் சாவ் கோன் இயோ ஆகியோர் தங்களுக்குள் நடக்கும் பகிரங்கமான மோதலை நிறுத்த வேண்டும்.

ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

பொதுக் கொள்கை தொடர்பான உட்கட்சி வேறுபாடுகளைக் கையாள்வதற்கு, இரு தலைவர்களுக்கும் இடையே நடக்கும் பகிரங்கமான மோதல் ஆரோக்கியமற்றது, பொருத்தமற்றது.

இது குறித்து ஜசெக மத்திய தலைமை மிகவும் கவலை கொண்டுள்ளது.

முன்னாள் ஜசெக பொதுச் செயலாளர், முன்னாள் பினாங்கு முதலமைச்சர் என்ற முறையில், கட்சி ஒழுக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தை லிம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விளக்கினார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாக விவாதிப்பதை விட, உள்ளக வழிமுறைகள் மூலம் தெரிவிக்க வேண்டும்.

நமது முதலமைச்சரையும் மாநில அரசையும் பாதிக்கும் வகையில் கருத்து வேறுபாடுகள் வெளிப்படுத்தப்படக் கூடாது என்று போக்குவரத்து அமைச்சருமான அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset