செய்திகள் மலேசியா
மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் வரம்பு மீற வேண்டாம்: மாமன்னர் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் யாரும் வரம்பு மீற வேண்டாம்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு எச்சரித்தார்.
தேசிய ஒற்றுமையைக் குலைக்க முயற்சிக்கும் எந்தவொரு கட்சிக்கும் எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்த அவர்,
மக்களின் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு சக்திகளும் சமரசமின்றி வேரோடு அழிக்கப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு தாம் விடுத்த கண்டனத்தை மாமன்னர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஆனால், அந்த எச்சரிக்கை சில கட்சிகளால் மறக்கப்பட்டுவிட்டதாகவோ அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவோ அவர் விவரித்தார்.
ஒரு கவலையும் எச்சரிக்கையும் ஏற்படும்போது சட்ட நடவடிக்கை எடுப்பது அல்லது சமூகத் தலைவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல்களில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், மக்களிடையே அன்றாட நாகரிகப் பழக்கவழக்கங்களைச் செயல்படுத்துவதிலும், அது பேணி வளர்க்கப்பட வேண்டும்.
மேலும் அவ்வப்போது தொடர்ந்து நினைவூட்டப்பட வேண்டும்.
மேலும், ருக்குன் நெகாராவின் ஐந்து கோட்பாடுகளையும், குறிப்பாக அடக்கம், ஒழுக்கம் ஆகிய கோட்பாடுகளையும் மக்கள் மீண்டும் ஒருமுறை போற்ற வேண்டும் என்றும மாமன்னர் நினைவூட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 12:21 pm
துயரத்தில் தொடங்கிய பெருநாள்: தீக்கிரையாகிய வீடுகள்
March 21, 2026, 9:30 am
"நாங்கள் யாரிடமும் பணம் கேட்கவில்லை": JSPT தலைவர்
March 21, 2026, 8:34 am
"சின்னஞ்சிறு உள்ளங்களின் பெரிய அன்பு": ராயா கார்டுகளைப் படித்து நெகிழ்ந்த பிரதமர் அன்வார்
March 21, 2026, 8:31 am
"சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த கோரம்": தியோமான் தீவில் மோட்டார் சைக்கிள் விபத்து
March 21, 2026, 8:30 am
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ஈகைப் பெருநாளில் போர்நிறுத்தத்தை அன்வார் வரவேற்றார்
March 21, 2026, 8:22 am
மலேசியர்கள் அனைவருக்கும் ஈகைப் பெருநாள் வாழ்த்துக் கூறிய மாமன்னர் தம்பதியர்
March 20, 2026, 11:31 pm
"உண்மை தெரிய வேண்டும்": இதய நோயாளி மரணத்திற்கு நியாயம் கேட்கும் குடும்பத்தினர்
March 20, 2026, 11:28 pm
