செய்திகள் மலேசியா
சரியான தலைவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டிய கடமை ஊடகவியலாளர்களுக்கு உள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
சரியான தலைவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டிய கடமை ஊடகவியலாளர்களுக்கு உள்ளது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் குடும்ப தின விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
கடந்த காலங்களில் பத்திரிகையாளர்களிடையே பல்வேறு பிரிவினைகள் இருந்தது.
ஆனால் இப்போது அந்த பிரிவினைகள் எல்லாம் மறந்து ஊடகவியலாளர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த்ந் ஒற்றுமை மேலும் வலுப்பெற வேண்டும்.
தற்போது சூழ்நிலையில் பத்திரிகை துறை என்பது மிகவும் சவாலான துறையாக உள்ளது.
பொருளாதார ரீதியில் உட்பட பல்வேறு சவால்களை ஒவ்வொரு நாளும் அவர்கள் கடந்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் தலைவர்கள் பத்திரிகைகளை படிப்பார்கள். அதில் வரும் செய்திகளை படித்து தங்களை திருத்துக் கொண்டனர்.
ஆனால் இப்போதைய தலைவர்கள் பத்திரிகைகளை படிக்கிறார்களா என்பது கேள்விக் குறி தான்.
காரணம் அவர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியுமா என்பதும் கேள்விக் குறி தான்.
ஆக நாட்டில் சரியான தலைவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டிய கடமை ஊடகவியலாளர்களுக்கு உள்ளது.
அப்படி காட்டவில்லை என்றால் நம் சமுதாயத்திற்கு சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் போய்விடும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
இதனிடையே நாட்டில் உள்ள பத்திரிகையாளர்களை ஒன்று சேர்ந்துள்ள மன்னன் தலைமையிலான இந்த சங்கத்தை பாராட்டுகிறேன்.
அதே வேளையில் சங்கத்தில் உள்ள அனைவருக்கும் காப்புறுதி அட்டையை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை இந்த சங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 1:48 pm
மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் வரம்பு மீற வேண்டாம்: மாமன்னர் எச்சரிக்கை
March 21, 2026, 12:21 pm
துயரத்தில் தொடங்கிய பெருநாள்: தீக்கிரையாகிய வீடுகள்
March 21, 2026, 9:30 am
"நாங்கள் யாரிடமும் பணம் கேட்கவில்லை": JSPT தலைவர்
March 21, 2026, 8:34 am
"சின்னஞ்சிறு உள்ளங்களின் பெரிய அன்பு": ராயா கார்டுகளைப் படித்து நெகிழ்ந்த பிரதமர் அன்வார்
March 21, 2026, 8:31 am
"சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த கோரம்": தியோமான் தீவில் மோட்டார் சைக்கிள் விபத்து
March 21, 2026, 8:30 am
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ஈகைப் பெருநாளில் போர்நிறுத்தத்தை அன்வார் வரவேற்றார்
March 21, 2026, 8:22 am
மலேசியர்கள் அனைவருக்கும் ஈகைப் பெருநாள் வாழ்த்துக் கூறிய மாமன்னர் தம்பதியர்
March 20, 2026, 11:31 pm
"உண்மை தெரிய வேண்டும்": இதய நோயாளி மரணத்திற்கு நியாயம் கேட்கும் குடும்பத்தினர்
March 20, 2026, 11:28 pm
