நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக்கில் வெறி நாய்க்கடி நோய்க்கு 10 வயது சிறுவன் மரணம்

கூச்சிங்:

சரவாக்கில் 10 வயது சிறுவன் ஒருவன் வெறி நாய்க்கடி நோயால் உயிரிழந்ததாக மேலும் ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.

கூச்சிங்கைச் சேர்ந்த அந்தச் சிறுவன், கடந்த புதன்கிழமை சரவா பொது மருத்துவமனையில் உயிரிழந்தான்.

கடந்த பிப்ரவரி 11 அன்று தெருநாய் கடித்த சம்பவத்தில், அந்தச் சிறுவன் காயத்தைக் கழுவியதோடு நிறுத்திக்கொண்டு, மேலதிக சிகிச்சை பெறவில்லை என்று சரவா மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவருக்கு கடந்த மார்ச் 11 அன்று பசியின்மை, வாந்தி, கழுத்துப் பிடிப்பு,  நீர் பயம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கின.

பின்னர் அவர் மார்ச் 13 அன்று ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதே நாளில் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று சுகாதாரத் துறை ஒரு அறிக்கையில் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset