செய்திகள் மலேசியா
துப்பாக்கிச் சூட்டில் தொழிற்சாலை ஊழியர் காயம்; கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது: போலிஸ்
பாடாங் செராய்:
கெடாவின் படாங் செராய் பகுதியில், தனது குடும்ப வீட்டின் முன்பாக நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு தொழிற்சாலை ஊழியர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்திய கூலிம் மாவட்ட போலிஸ் துணைத் தலைவர் தெங்கு முகமது பைசால்,
கம்போங் பெர்மாத்தாங் டுரியான் என்ற இடத்தில் இரவு சுமார் 11.50 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறினார்.
42 வயதான ஆண் சந்தேக நபர், 24 வயதான பாதிக்கப்பட்டவரைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், அங்கு வந்ததும், பாதிக்கப்பட்டவரை சந்தேக நபர் தடுத்து வைத்தார்.
பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பிறகு சந்தேக நபர் ஒருமுறை சுட்டார், அந்தத் துப்பாக்கிக் குண்டு பாதிக்கப்பட்டவரைத் தாக்கி, அவரது கையில் காயங்களை ஏற்படுத்தி, பின்னர் அவரது மார்பைத் துளைத்தது என்று அவர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 4:21 pm
நோன்பு பெருநாள் முழுவதும் உணவு விநியோகம் போதுமானதாக இருக்கும்: மாட் சாபு
March 21, 2026, 4:20 pm
சரவாக்கில் வெறி நாய்க்கடி நோய்க்கு 10 வயது சிறுவன் மரணம்
March 21, 2026, 4:17 pm
வெளிப்படையாக வாக்குவாதம் செய்வதை குவாங் எங், சோ நிறுத்த வேண்டும்: அந்தோனி லோக்
March 21, 2026, 1:48 pm
மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் வரம்பு மீற வேண்டாம்: மாமன்னர் எச்சரிக்கை
March 21, 2026, 12:21 pm
துயரத்தில் தொடங்கிய பெருநாள்: தீக்கிரையாகிய வீடுகள்
March 21, 2026, 9:30 am
"நாங்கள் யாரிடமும் பணம் கேட்கவில்லை": JSPT தலைவர்
March 21, 2026, 8:34 am
