செய்திகள் மலேசியா
"சின்னஞ்சிறு உள்ளங்களின் பெரிய அன்பு": ராயா கார்டுகளைப் படித்து நெகிழ்ந்த பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
ஈகைப் பெருநாளை முன்னிட்டு மாணவர்களும் மலேசிய பொதுமக்களும் அனுப்பிய படைப்பாற்றல் மிக்க வாழ்த்து அட்டைகளுக்கு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
தனக்குக் கிடைத்த ஒவ்வொரு அட்டையையும் ஒரு வாழ்த்து மட்டுமல்ல, அன்பான நினைவுப் பரிசு என்றும், அது தனக்கு மிகுந்த அர்த்தம் கொடுப்பதாகவும் அவர் விவரித்தார்.
இந்த விஷயம் அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் பகிரப்பட்டது.
"அல்ஹம்துலில்லாஹ், குழந்தைகளின் படைப்பாற்றலிலிருந்து உருவான பல்வேறு வண்ணமயமான ஈகைத் திருநாள் வாழ்த்து அட்டைகளைப் பெற்றதில் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயுள்ளேன்; சில வரைந்தவை, சில ஒளிரும் வகையிலானவை, அவை முற்றிலும் அற்புதமானவை!
"எனது மனமார்ந்த நன்றிகள், நான் அவை அனைத்தையும் மிகவும் பாராட்டுகிறேன்!," என்று அவர் கூறினார்.
மூன்று நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த அந்த வீடியோவில், அன்வார் பல ஈகைத் திருநாள் அட்டைகளையும் படித்தார். அவற்றில் பஹாங்கில் உள்ள முவாட்சாம் ஜெயா ஆரம்பப்பள்ளி, நெகிரி செம்பிலானில் உள்ள தலாங் ஆரம்பப்பள்ளியைச் சேர்ந்த பூர்வக்குடி சமூக மாணவர்களின் அட்டைகளும் அடங்கும்.
"மிக்க நன்றி. நீங்கள் இதை (வெறும் காகிதத்தைப் பயன்படுத்தி) அனுப்பியது அற்புதம், தபால் அலுவலகம் அதை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது. நன்றி, தபால் அலுவலகம்," என்று அவர் தெரிவித்தார்.
வீடியோவின் முடிவில், ஈகைப் பண்டிகை அன்று வாழ்த்து தெரிவித்தல், பெற்றோரின் கைகளை முத்தமிடுதல், அவர்களிடம் மன்னிப்பும் ஆசீர்வாதமும் கேட்பது போன்ற பழக்கங்களை மறக்க வேண்டாம் என்றும் பிரதமர் குழந்தைகளுக்கு அறிவுரை கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 1:48 pm
மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் வரம்பு மீற வேண்டாம்: மாமன்னர் எச்சரிக்கை
March 21, 2026, 12:21 pm
துயரத்தில் தொடங்கிய பெருநாள்: தீக்கிரையாகிய வீடுகள்
March 21, 2026, 9:30 am
"நாங்கள் யாரிடமும் பணம் கேட்கவில்லை": JSPT தலைவர்
March 21, 2026, 8:31 am
"சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த கோரம்": தியோமான் தீவில் மோட்டார் சைக்கிள் விபத்து
March 21, 2026, 8:30 am
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ஈகைப் பெருநாளில் போர்நிறுத்தத்தை அன்வார் வரவேற்றார்
March 21, 2026, 8:22 am
மலேசியர்கள் அனைவருக்கும் ஈகைப் பெருநாள் வாழ்த்துக் கூறிய மாமன்னர் தம்பதியர்
March 20, 2026, 11:31 pm
"உண்மை தெரிய வேண்டும்": இதய நோயாளி மரணத்திற்கு நியாயம் கேட்கும் குடும்பத்தினர்
March 20, 2026, 11:28 pm
