
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்தியர்களின் பிரியமான உணவு பிரியாணி; ஒரு நிமிடத்தில் 115 ஆர்டர்களை பெற்றதாக ஸ்விக்கி தகவல்
சென்னை:
இந்தியர்களின் பிரியமான உணவுப்பட்டியலில் பிரியாணிக்கு தான் என்றுமே முதலிடம். பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, 2021ஆம் ஆண்டில் ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர்களை பெற்றதாக சுவையூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி, தங்களுக்கு கிடைத்த உணவு ஆர்டர்களின் அடிப்படையில் உணவு விற்பனை தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டும் இந்தியர்களின் பிரியமான உணவாக பிரியாணியே நீடிக்கிறது. ஸ்விக்கி தளத்தில் இந்த ஆண்டு மட்டும் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 115 பிரியாணி ஆர்டர்கள் வந்துள்ளன என்றால் பிரியாணி மீதான இந்தியர்களின் தீராத காதலை புரிந்து கொள்ள முடியும்.
உணவு பட்டியலில் பிரியாணிக்கு முதலிடம் என்றால், திண்பண்டங்கள் பட்டியலில் சமோசா மற்றும் பாவ் பஜ்ஜி ஆதிக்கம் செலுத்துகிறது.
இனிப்பு வகைகளில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டு குலோப் ஜாமுன் மற்றும் ரசமலாய் என்ற தகவலை வெளியிட்டு நாவூற வைத்துள்ளது ஸ்விக்கி.
சென்னைவாசிகளுக்கு பிரியமான உணவு சிக்கன் பிரியாணி தான் முதல் இடம்
சென்னைவாசிகள் அதிகமாக ஆர்டர் செய்த உணவுபட்டியலில் சிக்கன் பிரியாணிக்கே முதலிடம். சிக்கன் பிரைடு ரைஸ்,மட்டன் பிரியாணி, பன்னீர் பட்டர் மசாலா, நெய் பொங்கல் ஆகியவற்றையும் நமது சென்னை வாசிகள் அதிகளவில் ருசித்துள்ளனர் என்று புதிய தலைமுறை தகவல் தந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
August 30, 2025, 12:49 am
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி நொறுங்கி விழுந்தது.
August 27, 2025, 5:56 pm
பண்டிகைக்காக 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: சென்னையை அலங்கரித்த விதவிதமான விநாயகர்
August 27, 2025, 4:26 pm
தவெக தலைவர் விஜய் மீதும் அவரது பவுன்சர்கள் மீதும் 10 பேர் மீதும் வழக்குப் பதிவு
August 26, 2025, 2:08 pm
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூக்களின் விலை 3 மடங்காக உயர்வு
August 25, 2025, 1:27 pm
‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
August 24, 2025, 9:58 pm
இபிஎஸ் கீழ்ப்பாக்கம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது: பெங்களூரு புகழேந்தி
August 24, 2025, 6:47 pm
திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு: கனிமொழிக்கு பெரியார் விருது
August 23, 2025, 10:43 am