
செய்திகள் தமிழ் தொடர்புகள்
பண்டிகைக்காக 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: சென்னையை அலங்கரித்த விதவிதமான விநாயகர்
சென்னை:
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் நேற்று முக்கிய சந்தைகளில் விற்பனை களைகட்டியது. விநாயகர் சிலை மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். விடுமுறையையொட்டி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, சென்னையின் கோயம்பேடு, பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகள் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. அதேநேரம், பொருட்கள் மற்றும் பூக்களின் விலையும் வழக்கத்தை விட அதிகரித்திருந்தது.
விதவிதமான விநாயகர்:
மேலும் ரூ.100 முதல் ரூ.1000 வரையிலான வண்ண வண்ண விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிந்திருந்தன. இவற்றை வீட்டில் வைத்து செய்து வழிபடும் வகையில் குழந்தைகள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
எர்ணாவூர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் புலித்தோல் போர்த்திய விநாயகர், சுறாமீனுக்கு மேல் அமர்ந்திருக்கும் விநாயகர் சிலைகள், சிக்ஸ் பேக் விநாயகர் என முன்பதிவு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் லோடு ஆட்டோக்களில் ஏற்றி அனுப்பப்பட்டன.
கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்ட பதார்த்தங்களைச் செய்வதற்கான பொருட்களை வாங்க மளிகைக் கடைகளிலும் கூட்டம் குவிந்தது. குறிப்பாக மாலை நேரங்களில் இறுதி நேர வியாபாரம் களைகட்டியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2025, 12:49 am
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி நொறுங்கி விழுந்தது.
August 27, 2025, 4:26 pm
தவெக தலைவர் விஜய் மீதும் அவரது பவுன்சர்கள் மீதும் 10 பேர் மீதும் வழக்குப் பதிவு
August 26, 2025, 2:08 pm
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூக்களின் விலை 3 மடங்காக உயர்வு
August 25, 2025, 1:27 pm
‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
August 24, 2025, 9:58 pm
இபிஎஸ் கீழ்ப்பாக்கம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது: பெங்களூரு புகழேந்தி
August 24, 2025, 6:47 pm
திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு: கனிமொழிக்கு பெரியார் விருது
August 23, 2025, 10:43 am