நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி நொறுங்கி விழுந்தது.

சென்னை: 

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி விழுந்து நொறுங்கியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் விழும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வந்தது.

இதுவரையில் சுமாா் 85 முறைக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் உள்ள தனியார் உணவகத்தில் பயணிகள் உணவருந்தி கொண்டிருந்தபோது அந்த உணவகத்தின் நுழைவு வாயில் உள்ள 4 அடி அகலம் 8 அடி உயரம் கொண்ட கதவு திடீரென பலத்த சத்தத்துடன் நொறுங்கியது.

இதைகண்ட விமானப் பயணிகள் சிலா் அலறி கூச்சலிட்டனா். இதைக் கண்ட பாதுகாப்பு படையினர் பயணிகளை அப்புறப்படுத்தி இடத்தை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset