செய்திகள் தமிழ் தொடர்புகள்
‘எந்தக் கூட்டணியிலும் தவெக இல்லை!’: இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் அழுத்தமாக அறிவிப்பு
சென்னை:
“மதச்சார்பற்ற கொள்கையில் தவெக உறுதியாக உள்ளது. தவெக தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம்” என அக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ‘எந்தக் கூட்டணியிலும் தவெக இல்லை’ என்பதை அவர் அழுத்தமாக உறுதி செய்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் இன்று நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து, பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணி என பொய் பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்கள். தவெக எந்த டீமிலும் இல்லை. மக்கள் டீமில் தான் இருக்கிறது என தெரிந்ததும் வேறு என்ன அவதூறு பரப்பலாம் என யோசித்தனர்.
தவெக தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம். அதில் உறுதியாக இருக்கிறோம். மதச்சார்பற்ற கொள்கை, மதச்சார்பற்ற சமூக நீதியில் தவெக உறுதியாக உள்ளது.
அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் எந்தவித சமரசமும் வைத்துக்கொள்ள போவதில்லை. இது குறித்த பேச்சுகே இடமில்லை.
யார் என்ன அவதூறு பரப்பினாலும், அதை நம்ப வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்த டார்கெட்டை அடைய முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடுவதை அவர் உறுதி செய்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
