செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் தேர்தல் விதிமீறல்: 48 மணி நேரத்தில் 23 கோடி ரூபாய் பறிமுதல்
சென்னை:
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம், பொருட்களைத் தேர்தல் ஆணையம் அதிரடியாகப் பறிமுதல் செய்து வருகிறது.
கடந்த 48 மணி நேரத்திற்குள் மட்டும் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 23 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் சிக்கியுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம், தங்கம், வெள்ளிப் பொருட்கள், வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
"ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய, பணபலம், பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட வாரியாக நடத்தப்படும் இந்தச் சோதனைகள் வரும் நாட்களில் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
